Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசப் படம்: ஹேக்கர்கள் கைவரிசை..!

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (14:56 IST)
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலின் பேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்து அதில் ஆபாச புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த பக்கத்தை மீட்டு தர வேண்டும் என திருநள்ளாறு தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் 
 
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறில் சனீஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அதிகார பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த கோவிலில் நடைபெறும் விழாக்கள் பூஜைகள் புகைப்படங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும். 
 
இந்த நிலையில் திடீரென நடந்த சில நாட்களாக அந்த பேஸ்புக் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அந்த புகைப்படங்களை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து கோவில் நிர்வாகம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளது. 
 
சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில்  ஹேக்கர்கள் இந்த பக்கத்தை ஹேக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் பக்கத்தை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments