Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை

Advertiesment
காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை
, சனி, 10 நவம்பர் 2018 (16:34 IST)
கரூர் மாவட்டத்தில், குளித்தலை ராஜேந்திரத்தில் தற்போது அரசு மணல் கிடங்கு (மணல் விற்பனை நிலையம்) உள்ளது. அங்கு காவிரி ஆற்றில் இருந்து மணல் கொண்டு வந்து இறக்கப்பட்டு பின்பு விநியோகம் செய்யப்படுகின்றது. மணல் விற்பனை நிலையத்திற்கு (அரசு மணல் கிடங்கு) அரசு பர்மிட் என்று சொல்லக்கூடிய அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை, மேலும் மணல் விற்பனை நிலையத்திற்கு அனுமதி கேட்டே விண்ணப்பம் செய்யப்படவில்லை என பல்வேறு துறை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும், அந்த மணல் கிடங்கை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில் இன்றும், காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அதன் நிர்வாகிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இல்லாததை அடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். இந்நிலையில் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி இன்று கொடுத்ததாக கூறிய, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், விரைவில் இதற்காக வரும் 15 ம் தேதி முதல் பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்ததோடு, கரூர் அடுத்த நெரூர் பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் சார்பில், மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றதாகவும், இது எல்லாம், காவல்துறை பாதுகாப்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும், மேலும், அறப்போராட்டங்களில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனீஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியுமான நல்லக்கண்ணு வருகை தர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



பேட்டி : முகிலன் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் - ஒருங்கிணைப்பாளர்


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 24 மணி நேரத்தில் புயல்... சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து