Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனாதனமும் மதமும் வேறு வேறு: தமிழக ஆளுநர் ரவி

Advertiesment
Ravi
, ஞாயிறு, 26 ஜூன் 2022 (13:04 IST)
சனாதனமும் மதமும் வேறு வேறு என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கூறியுள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பல அரசியல்வாதிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் சனாதனம் குறித்து பேசியுள்ளார். 
 
இந்து சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்றும் இரண்டும் வெவ்வேறு என்றும் தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறியுள்ளார். மேலும் சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மையும் வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கு வித்தியாசம் உள்ளது என்றும் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர் என்றும் கூறியுள்ளார் 
 
தமிழக ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல்வாதிகள் என்ன ரியாக்ஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 11ல் ஈபிஎஸ் பொதுச் செயலாளராவார்: பொள்ளாச்சி ஜெயராமன்