Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரை விவாகரத்து செய்கிறார் சமந்தா.. சற்றுமுன் அவரே வெளியிட்ட அறிவிப்பு!

கணவரை விவாகரத்து செய்கிறார் சமந்தா.. சற்றுமுன் அவரே வெளியிட்ட அறிவிப்பு!
, சனி, 2 அக்டோபர் 2021 (16:18 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 
 
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான
வை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 
 
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் முன்பைவிட தற்போது அதிக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.
 
இவ்வாறு சமந்தா கவர்ச்சியாக நடிப்பது, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது போன்ற செயல்கள் நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தாவிடம் பல முறை பேசியும் அவர் மாறுவதாக தெரியவில்லையாம். 
webdunia
 
சினிமா வேறு சொந்த வாழ்க்கை வேறு எனக்கூறி கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்த மறுத்துவிட்டாராம். இவ்வளவு பிரச்சனைக்கு நடுவே தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தாவின் காட்டுத்தனமான கவர்ச்சியால் நாக சைதன்யாவின் குடும்பம் கலங்கிவிட்டதாம்.
 
இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் சற்றுமுன் நடிகை சமந்தா தனது இன்ஸ்ட்டாகிராமில் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், ஊடக நண்பர்களும், ரசிகர்களும் இந்த கஷ்டமான நேரத்தில் தங்களை தொல்லை செய்யவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரைஸ் குக்கரை திருமணம் செய்த நபர்… 2வாரத்தில் விவாகரத்து!