Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (17:43 IST)
ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த  ஆம் தேதி விஜயகுமார் அந்தக் கடையில் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.265 க்கு ரசீது கொடுத்துள்ளார்.

மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்திருந்தார். இதையடுத்து, தற்போது விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments