பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவரின் தாய் சைலைஜா, ஜெயலலிதாவின் சகோதரி அல்ல என கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார்.
இந்நிலையில், தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி இதுபற்றி கருத்து தெரிவித்த போது கூறியதாவது:
10 வருடங்களுக்கு முன்பு அம்ருதாவின் தாய் சைலஜா என்னை சந்தித்து, ஜெயலலிதா என் சகோதரி. எனவே, அவரை சந்திக்க ஏற்பாடு செய்து தாருங்கள் எனக் கூறினார். ஆனால், அவர்தான் ஜெ.வின் சகோதரி என்பதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.
அதன் பின் தனக்கு எம்.எல்.ஏ, எம்பி. சீட் வாங்கித் தருமாறு கேட்டார். அதிலிருந்தே அவர் பொய் சொல்கிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன். அதன் அவரை சந்திப்பதையே தவிர்த்துவிட்டேன். இவர்கள் அனைவரும் கூறுவதுபோல் ஜெயலலிதாவிற்கு எந்த மகளும் கிடையாது” எனக் கூறினார்.