தமிழின் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதை கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவித்துள்ளனர்.
தமிழின் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது, “சூல்” நாவலுக்காக எழுத்தாளர் சோ.தர்மன்-க்கு வழங்கப்பட்டது. மராமத்து பணிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், நீர்நிலைகள், விவசாயம் போன்ற கிராமத்தின் வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்நாவல் பேசியுள்ளது. இந்நாவல் தமிழின் மிக முக்கியமான நாவலாக பரிந்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில் மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற நூலை தமிழில் மொழிப்பெயர்த்த கே.வி.ஜெய ஸ்ரீக்கு சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க கால தமிழ் வாழ்வை செல்லி செல்கிற நாவலை சிறப்பாக மொழிப்பெயர்த்துள்ளதாக மூத்த எழுத்தாளர்கள் இந்நாவலை பாராட்டியுள்ளனர்.