சசிகலா தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அதிமுகவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அதிமுக கட்சியை உடைக்க நான் சதி செய்வதாக வதந்தி பரப்பப்படுவதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்குமாறு, வலியுறுத்திய முக்கிய நிர்வாகிகளில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒருவர்.
ஆனால், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், சைதை துரைசாமி பொதுக்குழு கூட்டம், மூத்த தலைவர் ஆலோசனைக் கூட்டம், நிர்வாகிகள் கூட்டம் என எதிலும் யாருடைய கண்களுக்குமே தென்படவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபாவுடன் சேர்ந்து அதிமுகவை உடைக்க சைதை துரைசாமி முயற்சி செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து, சைதை துரைசாமி, டிசம்பர் 31, வீட்டு மாடி படிக்கட்டில் தவறி விழுந்ததால், கால் ஜவ்வு கிழிந்து, காலில் கட்டு போட்டு வீட்டில் முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன். எனவேதான் வெளியே வர முடியாமல் உள்ளேன்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி என்னை பற்றி வரும் தகவல்கள் வெறும் வதந்திதான் என தெரிவித்துள்ளார்.