Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காடுவெட்டி குருவைக் கொல்லப்பார்த்ததா திமுக ? – பாமகவுக்கு எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் !

Advertiesment
எஸ்.எஸ். சிவசங்கர்
, வியாழன், 19 செப்டம்பர் 2019 (14:10 IST)
காடுவெட்டி குருவை திமுக கொலை செய்ய முயற்சி செய்ததாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும் பாமக பிரமுகருமான காடுவெட்டி குரு நினைவாகக் கட்டப்பட்ட மணிமண்டப திறப்பு நிகழ்வு காடுவெட்டி கிராமத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது பேசிய ராமதாஸ் ’ குருவை வளர விடாமல் அவரை கொல்ல வேண்டும் என்று திமுக முயற்சி செய்தது. இதற்காக பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் ‘ழக்கமாக தான் பேச நினைப்பதை, குருவை பேச வைத்து குளிர் காய்வது ராமதாஸின் வாடிக்கை. இப்போது குரு இல்லாத சூழலில், குரு பெயரை பயன்படுத்தி பாமகவை உயிர்ப்பிக்க நினைக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “திமுக ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன? ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே?, குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் திமுக உடன் கூட்டணி வைத்தீர்கள் ?குருவை கொல்ல திமுகவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி திமுக கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார்” என்று ராமதாஸுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள சிவசங்கர்,

“குரு மறைவிற்கு பிறகு, பாமகவின் சரிவு துவங்கி விட்டது. குரு உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டு வன்னியர் சங்கத்தினராலேயே சொல்லப்பட்டது. கடைசி நாட்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். ஆனால் அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்கு காடுவெட்டி கிராமத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பு. அடுத்து குரு மறைவிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் குருவை புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்து விட்டார். வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இதை எல்லாம் திசை திருப்பத் தான் இப்போது 'குருவை கொல்ல முயற்சி' என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார். அதிலும் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு” என்றும் குறிப்பிட்டுள்ள சிவசங்கர், “காடுவெட்டி குரு அவர்களை பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களுக்கு போலீஸ் வேனில் அலைக்கழித்து, அவர் உடல்நலம் முழுவதும் குன்றி, நோய் வாய்ப்படுவதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று ராமதாஸே குற்றம் சுமத்திய காலம் உண்டு. ஒட்டுமொத்தமாக, குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் ராமதாஸ்.இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 , 12 வகுப்புகளுக்கு அறிமுகமாகும் 500 மதிப்பெண் நடைமுறை..