Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவையில் ஓட்டல் தாக்குதல்… எஸ் ஐ பணியிடை நீக்கம்!

Advertiesment
கோவையில் ஓட்டல் தாக்குதல்… எஸ் ஐ பணியிடை நீக்கம்!
, செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:56 IST)
கோவையில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த பெண்கள் உட்பட சிலரை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட 11 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.30 மணியளவில் பயணிகள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் உணவகத்தை மூட சொல்லியதுடன், உணவருந்தி கொண்டிருந்தவர்களையும் லத்தியால் தாக்கினார். இதனால் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். 11 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதி உள்ள நிலையில் 10.30 மணியளவில் காவலர் இந்த தாக்குதலை நடத்தியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகியது.

இது சம்மந்தமாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இப்போது தாக்குதலில் ஈடுபட்ட முத்து முதலில் வேறுதுறைக்கு மாற்றப்பட்ட நிலையில் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நண்பனின் பிணத்தை பார்க்க மருத்துவமனை ஜன்னலை உடைத்த வாலிபர் கைது!