Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த முதலமைச்சர் அஜித்: மீண்டும் பரவும் வதந்தி!

அடுத்த முதலமைச்சர் அஜித்: மீண்டும் பரவும் வதந்தி!

அடுத்த முதலமைச்சர் அஜித்: மீண்டும் பரவும் வதந்தி!
, வியாழன், 8 டிசம்பர் 2016 (15:37 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து, அவரது முதல்வர் அரியணையில் அமரப் போகிறார் நடிகர் அஜித் என்ற செய்தி தீயாய் பரவியது.


 
 
ஜெயலலிதா மரணமடைந்த போது பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அஜித். ஆனால் உடனடியாக சென்னை கிளம்பி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினியும் வந்தார்.
 
இதனையடுத்து கேரளாவில் உள்ள ஊடகங்கள் அடுத்த முதல்வர் நடிகர் அஜித் தான், அவர்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என சர்ச்சையை கிளப்பி விட்டன. இந்த செய்தி அவரது ரசிகர்களால் அதிகமாக பரப்பப்பட்டு காட்டுத் தீயை போல பரவியது.
 
இதனையடுத்து அஜித் தரப்பினர் இதனை மறுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அஜித் அன்பு வைத்திருக்கிறார். தன்னுடைய தாயை போல நினைக்கிறார். ஜெயலலிதாவின் தைரியம், பண்பு, அக்கறை போன்றவரை அஜித்துக்கு பிடிக்கும்.
 
அதனால் தான் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பல்கேரியாவில் இருந்து உடனே கிளம்பி வந்தார். மற்றபடி அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே கிடையாது என கூறியுள்ளனர். இதற்கு முன்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அடுத்த முதலமைச்சர் அஜித் என்ற வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் மனங்கவர்ந்த நாவல்கள் எது தெரியுமா??