Publish Date: Thu, 24 Nov 2022 (13:13 IST)
Updated Date: Thu, 24 Nov 2022 (13:15 IST)
காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து அக்கட்சியின் எம்எல்ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 15 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலில் ரூபி மனோகரன் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரூபி மனோகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வரும் நிலையில் அந்த பதவியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.