ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஒசாமா பின் பில்லேடன் படத்தை பயன்படுத்தியது, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போன்ற அமைப்பினரே என தெரிவிக்கின்றன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் க்குக்கு பொங்கல் பண்டிகையை ஓட்டி தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது.
இனி மேல் இது போன்ற போராட்டங்கள் மூலம் அரசை எந்த விதத்திலும் நிர்பந்திக்க கூடாது என்ற உள்நோக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது ஜனவரி 23ஆம் தேதி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
திட்டமிட்டே காவல் துறையினர் போராட்டங்காரர்கள் மீது தாக்குதல் கடும் தாக்குதல் நடத்தினர். அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர். பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. குறிப்பாக ஆட்டோ மற்றும் குடிசை வீடுகளுக்கு காவல்துறையினரே தீ வைத்தது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு காரணம் குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார். அப்போது போராட்டத்தின்போது சிலர் பின்லேடன் படத்தை பயன்படுத்தினர். இது போன்று திட்டமிட்டு போராட்டத்தை திசைதிருப்பு அமைதியை சீர்குலைக்க முயன்றனர் என்று தெரிவித்தார்.
அப்போது அவர் பின்லேடன் உருவம் பொறித்த படத்தை ஒரு பைக்கில் தொங்க விட்டவாரும், ஒருவர் வண்டியில் நின்று கொண்டு மோடியின் படத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு உடல் முழுவதும் செருப்பு மாலை இருப்பது போன்ற ஒரு படத்தை காட்டினார். இதனையே போராட்டத்தில் வன்முறையை உருவாக்கும் சதியாக குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட புகைப்படும் சில தினங்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர், அந்த வாகனம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதும் வந்திருக்கிறது.
அந்த தகவலின் படி பில்லேடன் படத்தை பயன்படுத்தியது, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி போன்ற அமைப்பினரே என தெரிவிக்கின்றன.
அந்த தகவலின் படி ஏற்கனவே ”ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க. இந்து முன்னணி அமைப்பினர் மாணவர்கள் போராட்டங்களினூடே முஸ்லீம்கள் போல் தோற்றமளித்து பரவலான ஊடுறுவி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் போராட்டத்தின்போது TN 05 BC 3957 என்ற எண்ணுடைய இந்த இருசக்கர வாகனத்தில் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர் புகைப்படமும் அதனுடன் அல்காய்தா – உஸாமா பின் லேடன் படமும் உள்ளதுபோல் உள்ள ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததது.
அந்த இருசக்கர வாகனம் இந்து முன்னணியை சார்ந்த ராஜி.S என்பவருடையது. இதை ஓட்டி செல்லுபவர் ஆர்.எஸ்.எஸ். ன் மாணவர் பிரிவான ABVP (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.
இதன்மூலம் பாஜகவினரே எல்லா கிரிமினல் வேலைகளையும் செய்துவிட்டு முஸ்லிம்கள் செய்ததுபோல் மக்களுக்கு காண்பித்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தது தெளிவாகிறது என பல இணையதள பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.