Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (10:31 IST)
உலக சாதனை முயற்சியாக கலைஞர் நூற்றாண்டு மராத்தான் போட்டியை தமிழக அரசு இன்று  நடத்தியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில்,  விளையாட்டு, வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு பண்ணாட்டு மராத்தான் போட்டி 42கிமீ, 10 கிமீ, 5கிமீ என  4 பிரிவுகளில்  நடைபெற்ற நிலையில்,  வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் ரூ.10.70 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ள நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிசு வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர்.

மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி வசூலானது என்றும், இது சாதாரண மாரத்தான் அல்ல சமூக நீதி மாரத்தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்ற  நிலையில்  உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments