Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் முறைப்படி தேர்தல் நடந்தால் திமுகவின் தலைவராக கனிமொழி அக்காதான் வெற்றி பெறுவார்கள் - அண்ணாமலை

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (10:19 IST)
திமுகவில் முறைப்படி தேர்தல்  நடந்தால் திமுகவின் தலைவராக கனிமொழி அக்காதான் வெற்றி பெறுவார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம்  நடைபெற்றது.  இதக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில், ‘’பாஜகவினரை பொறுத்தவரை அவர்களுக்கு வாழ்வா? சாவா?  தேர்தல். அதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.

பாஜகவினர் தமிழ் நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைவதால் நம்மை நோக்கிப் பாய்வார்கள்… கடந்த காலங்களில் நாம் இதுபோன்ற பல தடைகளை சமாளித்து வெற்றி பெற்றோம். இந்த முறையும் அதேபோல் நாம் முழு வெற்றிபெற ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: வாழ்வா? சாவா? தேர்தல் எங்களுக்கில்லை, திமுகவுக்குத்தான். முதல்வர் ஸ்டாலின் வரும் தேர்தலில் தோற்றால், திமுக தலைமையில் மாற்றம் வரும். அக்கட்சியில் முறைப்படி தேர்தல்  நடந்தால் திமுகவின் தலைவராக கனிமொழி அக்காதான் வெற்றி பெறுவார்கள். இதை நான் கூறவில்லை. இந்த பாதயாத்திரை பயணத்தின்போது சந்திக்கும் திமுகவினர்தான் என்னிடம் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments