Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்டபடி வாய் விட்ட சீனியரை அடக்கி வைத்த திமுக தலைமை!!

Advertiesment
கண்டபடி வாய் விட்ட சீனியரை அடக்கி வைத்த திமுக தலைமை!!
, செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (12:44 IST)
தனது அநாகரீக பேச்சுக்கு வருத்தும் தெரிவித்துள்ளார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 
 
சமீபத்தில், திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உற்ப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். இதனால் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் தற்போது இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,  
 
நான் எந்த உள்நோக்கத்தோடும் அவ்வாறு பேசவில்லை. நான் யாரையும் தனிப்பட்ட வகையில் பேசவில்லை. ஒரு சில ஊடகங்களை மட்டுமே தாக்கி பேசினேன். இதனால் உங்களுக்கு காயம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். 
 
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினும் என்னிடம் பேசினார், அவரும் வருத்தம் தெரிவித்தார். எனவே நானும் இதை தவறு என்று உணர்ந்து கொண்டேன், அதனால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் நைட்ல என்ன பண்ண? இழுத்து மூடிட்டு ஓட தான் முடியும்: வோடபோன் பரிதாபம்!!