Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவோம்: பாமக ராமதாசுக்கு திமுக எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (13:33 IST)
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை கட்டப்பட்டதாக சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் பாஜக பிரமுகருமான பேராசிரியர் சீனிவாசன் அவர்களும் குற்றம் சாட்டியிருந்தனர்.  இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விசாரணையும் சமீபத்தில் நடந்தது 
 
.இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜகவின் பேராசிரியர் சீனிவாசன் ஆகிய இருவரும் தங்களுடைய கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது இந்த நோட்டீசுக்கு இருவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது திமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ்ஸூக்கு ராமதாஸ் மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகிய இருவரும் எந்தவித பதிலும் அளிக்காததால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்பொழுதும் கூட ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை தாங்கள் கூறிய கருத்து தவறானது என்று இருவரும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம். அப்படி இல்லை எனில் இந்த வழக்கை இருவரும் சந்தித்தே தீர வேண்டும் என எச்சரிக்கை விடுவதாக ஆர்எஸ் பாரதி கூறினார் 
 
ஆர்எஸ் பாரதியின் எச்சரிக்கையை அடுத்து  டாக்டர் ராமதாஸ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் மன்னிப்பு கேட்பார்களா? அல்லது வழக்கை எதிர் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments