அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வரும் நிலையில் அவரைப் பார்க்க திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்ற நிலையில் செந்தில் பாலாஜியை பார்க்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்றும் செந்தில் பாலாஜி நிலை குறித்து அறிய விரும்பினோம் ஆனால் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறிய ஆர் எஸ் பாரதி தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷாவை நோக்கி ஒரு சில கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் அந்த கேள்விகளுக்கு அமித்ஷாவால் எந்தவிதமான பதிலும் சொல்ல முடியவில்லை அதற்கு பதிலாக அமலாக்க துறையை ஏவி விட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.