Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து மோசடி.. முன்னாள் காவல்துறை அதிகாரி கைது..!

2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து மோசடி..  முன்னாள் காவல்துறை அதிகாரி கைது..!
, வியாழன், 15 ஜூன் 2023 (08:29 IST)
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில்2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து மோசடி செய்த  முன்னாள் காவல்துறை அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் என்பவர் 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 84 ஆயிரம் பேரிடம் ரூ 5900 கோடி மோசடி நடந்ததாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது
 
ஐ.எப்.எஸ் நிதி மோசடியில் இதுவரை 6 பேர் கைதான நிலையில் 791 வங்கிக் கணக்குகளில் ரூ.121 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகள் 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டுக்கு தப்பியோடிய 4 பேரை பிடிக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல வழக்கில் தப்பித்தாலும் போக்சோவில் தப்பிக்க முடியாது! - ஒரே ஒரு வழக்கில் வசமாக சிக்கிய நாகர்கோவில் காசி!