Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 புரோட்டா சாப்பிட்டா ரூ.5001 பரிசு: அடுத்த புரோட்டா சூரி யார்?

25 புரோட்டா சாப்பிட்டா ரூ.5001 பரிசு: அடுத்த புரோட்டா சூரி யார்?

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (10:44 IST)
திரைப்படம் ஒன்றில் 50 புரோட்டா சாப்பிட்டால் ரூ.1000 பரிசு என்ற காட்சி மிகவும் பிரபலமான ஒன்று. அதே போல் தற்போது ஒரு ஹோட்டல் 25 புரேட்டா சாப்பிட்டால், ரூ.5001 பரிசு அறிவித்துள்ளது.


 
 
கோவை அருகே அன்னூரில் உள்ள ஒரு ஹோட்டலில் 25 புரோட்டா சாப்பிட்டால் ரூ.5001 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருகிற 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த போட்டி நடத்தப்பட்டவுள்ளது. ஒரு நபர் 25 புரோட்டாவை சாப்பிட வேண்டும். போட்டியில் பங்கேற்று 25 புரோட்டா சாப்பிட முடியாவிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டும்.
 
வித்தியாசமான போட்டி நடத்த வேண்டும் என்று எண்ணியதால் இந்த போட்டி அறிவிக்கப்பட்டது என ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த போட்டியில் பங்குபெற விரும்பும்வோர் நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
அறிவிப்பு வெளியிட்டு 4 நாட்களில் 2000 பேர் போனில் தொடர்புக் கொண்டு விவரம் கேட்டறிந்ததாகவும் சுமார் 200 பேர் நேரில் வந்து தங்கள் பெயரை பதிவு செய்ததாகவும் அதன் உரிமையாளர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments