Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுப்பொலிவு பெறுகிறது அம்மா உணவகங்கள்.. ரூ. 5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி..!

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:23 IST)
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி அம்மா உணவகம் திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களையும் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அம்மா உணவகங்களின் கட்டிடங்களை சீரமைப்பது, பழுதான பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை மாற்றுவது ஆகிவற்றை செய்ய மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ருசியான புதிய வகை உணவுகளையும் அம்மா உணவகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments