Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (08:48 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு  தாக்கல் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதை அடுத்து ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 14ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும்   தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது .

மேலும் வேட்புமனு பரிசீலனை ஜூன் 24ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெரும் கடைசி தேதி ஜூன் 26 ஆம் தேதி என்றும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments