Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டுக் கறி விருந்து வைத்து ரூ.4 கோடி மொய் வசூல்....

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (18:22 IST)
புதுக்கோட்டை  மாவட்டத்தில் தடபுடலாக ஆடுக்கறி விருந்து வைத்து மொய்பணமாக ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்துக்காக ,  ஆட்டுக் கறி சமைத்து , அந்த ஊரில் உள்ள மக்களுக்கு விருத்து படைத்துள்ளார். 50 ஆயிரம் பத்திரிக்கைகள் அச்சடிக்கப்படு விநியோகிப்பட்டதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர் .இதற்கு மொய்யாக அவருக்கு ரூ. 4 கோடி கிடைத்துள்ளது.
 
அந்த ஊரில் மக்கள் அனைவருக்கும் விருந்து படைப்பதும் அதற்கு மொய்ப்பணம் வசூலிப்பதும் வழக்கமான ஒன்றாகும். எனவே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டுவிட்டு அதற்கு மொய்பணமும் தந்துள்ள சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த விருத்துக்கு மக்களிடம் பணம் வசூல் செய்ய தேசிய பொதுத்துறை   வங்கி ஒன்றும் தன் கிளையை வைத்துள்ளது. அது டிஜிட்டல் வழி மக்கள் பணம் செலுத்த பேருதவியாக உள்ளது. இந்தப் பணத்தை பாதுகாப்புடன் கொண்டுசெல்ல கடுமையான போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments