Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைப்பு..!

cbi6

Siva

, ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (13:39 IST)
சென்னை, தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் 350 பக்க ஆவணங்களை சிபிசிஐடி வசம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்ததாகவும், கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. எனவே இனிமேல் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்யும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
 
முன்னதாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த ஆறாம் தேதி இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விவகாரத்தில் சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்..சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!