ஆர்.கே.நகர் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய்: வெல்லப்போவது யார்?
ஆர்.கே.நகர் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய்: வெல்லப்போவது யார்?
தமிழக தேர்தலில் பணத்தை கொடுத்து மக்களின் வாக்கை பெற்றுவிடலாம் என்ற கணக்கில் பல அரசியல்வாதிகள் உள்ளனர். கடந்த காலங்களில் அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதிலும் இடைத்தேர்தல் என்றால் பணம் புரளும்.
கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கூட கண்டெய்னர் கண்டெய்னராக பணங்கள் பிடிக்கப்பட்டு பல்வேறு காரணங்கள் அதற்கு கூறப்பட்டது. தேர்தல் வந்தால் பணத்தை மட்டுமே நம்பி கட்சிகள் களம் இறங்கும் சூழல் நிலவி வருகிறது. அதற்காக பல்வேறு ஃபார்முலாக்களும் கையாளப்படுகின்றன.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் வர உள்ள இடைத்தேர்தலில் பணம் பெருமளவு புரளும் என கூறப்படுகிறது. வாக்களர்களுக்கு தற்போது வக்குக்கு பணத்துக்கு பதிலாக டோக்கன் வழங்கி பின்னர் பணம் அளிக்கும் முறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்வது குறித்து புகார் தெரிவித்து இருப்பதாக அவர் கூறினார். ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கி இருக்கிறார்கள் என்றும் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தமிழக வாக்காளர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது போன்ற சூழல் உள்ளது. இதனால் மக்கள் பணத்தை வாங்கி ஏமாறுவார்களா, இல்லை பணத்தை கொடுத்து மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவார்களா என்பதை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்திவிடும்.