Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏடிஎம்மில் ரூ.1000க்கு பதிலாக ரூ.3000..! பணம் எடுக்க குவிந்த கூட்டம்! – வேலூரில் பரபரப்பு!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
, ஞாயிறு, 9 ஜூலை 2023 (13:44 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.1000 எடுத்தால் ரூ.3000 பணம் வந்ததால் பணம் எடுக்க மக்கள் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏடிஎம்மில் ஒருவர் ரூ.1000 பணம் எடுக்க சென்றுள்ளார். ஏடிஎம்மில் ரூ.1000 என பதிவு செய்தபோது அவருக்கு 500 ரூபாய் நோட்டுகள் 6 நோட்டுகள் வந்துள்ளது.

ஏடிஎம்மில் அதிகமாக பணம் கிடைப்பதாக இந்த செய்தி காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியுள்ளது. அதையடுத்து ஏராளமான மக்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க குவிந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வங்கி அதிகாரிகளும் காவல் துறையினரும் மக்களை அப்புறப்படுத்தி ஏடிஎம்மை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

இதனால் பலர் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.15 லட்சம் என்ன, ரூ.15 கூட கொடுக்கவில்லை.. மோடி மீது முதல்வர் குற்றச்சாட்டு.. அண்ணாமலை பதிலடி..!