Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள்: ஜூன் 3ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

Advertiesment
ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள்: ஜூன் 3ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
, செவ்வாய், 25 மே 2021 (20:42 IST)
கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். 
 
அதில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 ஜூன் மூன்றாம் தேதி வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் 
 
அதன் அடிப்படையில் தற்போது கொரோனா நிவாரண இரண்டாவது தவணை நிதியான ரூ.2000ஐ ஜூலை 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் அதே தினத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா கேஸ்கள்!