Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
MK Stalin
, வெள்ளி, 17 மார்ச் 2023 (19:59 IST)
அருணாச்சலபிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அருணாச்சலபிரதேசத்தின் திராங் பகுதியிலுள்ள போம்டிலா அருகே இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, காலை 9:15 மணிக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையுடமான தொடர்பை இழந்து விபத்தில் சிக்கியது..

இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரை தேடும் பணிகள் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் பகல் 12 30 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து புகை வந்து கொண்டிருந்த நிலையில் அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும்  உடற்கருகி உயிரிழந்தனர்  என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் வுவிவி பிரட்டி மற்றும் ஜெயந்த் என்றும் தெரியவந்தது. இதில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவர் வீரர்கள் இருவருக்கும் முழு ராணுவ மரியாதை செய்யப்பட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அருணாச்சல பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலால் 300-க்கும் அதிகமானோர் பலி