Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ. 10,000 அபராதம்: உதகை நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (17:08 IST)
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ. 10,000 அபராதம்: உதகை நீதிமன்றம் உத்தரவு..!
சுற்றுலாத்துறை அமைச்சருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து உதகமண்டலம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குன்னூர் வெலிங்டனில் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டோன்மெண்ட் துணை தலைவர் தேர்தலின் போது திமுக அதிமுகவினர் மோதிக்கொண்டனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணைக்கு அமைச்சர் ராமச்சந்திரன் ஆஜராகவில்லை. 
 
இதனை அடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதே வழக்கில் ஆஜராகாத ஓபிஎஸ் நீலகிரி மாவட்ட செயலாளர் பாரதியார் என்பவருக்கும் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த அபராத தொகை சீரடி சாய்பாபா கோவில் மருத்துவமனைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் கைது

நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

புளூடூத் ஹெட்போன் வெடித்து காது சேதம்.. சிவகங்கை இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!

போலி ஊடகவியலாளர்களின் அரசியல் விவாதங்கள்.. நேரத்தை வீணடிக்க வேண்டாம்: பிரசாந்த் கிஷோர் கருத்து

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. இன்றும் சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments