நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1,000 – எங்கு? எதற்கு?

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (11:06 IST)
நாளை முதல் ரேஷன் கடைகளில், மழையினால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அதன் பின் அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதை அடுத்து வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனிடையே முன்னதாக பெய்த மழை காரணமாக மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க அரசாணை வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையை காண்பித்து ரூ.1000 நிவாரணம் pஎறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதற்காக ரூ.16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தரங்கபாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து நாளை முதல் ரேஷன் கடைகளில், மழையினால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

 Edited by: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments