Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் பரிசுக்கு பதில் ரூ.1000 பணம்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Advertiesment
money
, புதன், 9 நவம்பர் 2022 (11:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக அரிசி கரும்பு வெல்லம் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்படும் என்பதும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருள்களில் பெரும் குளறுபடி ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இதனை அடுத்து அண்டை மாநிலமான புதுவையில் பொங்கல் பரிசுப்பொருட்களுக்கு பதில் ரூ.1000  வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரெங்கசாமி தெரிவித்திருந்தார்
 
 இதனை அடுத்து தமிழகத்திலும்  இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கப் படுவதற்கு பதிலாக அனைத்து அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் பணம் வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
பொஞ்கல் தொகுப்பு அடங்கிய பொருள்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டது என அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் செய்ததை அடுத்து தமிழக முதல்வர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: அமைச்சர் சேகர் பாபு