Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:00 IST)
சரக்கு வாகனம் கவிழ்ந்து உயிரிழந்த பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்!
 
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நெல்லையிலிருந்து வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற குட்டியானை எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 
 
இந்த விபத்தில் மணக்காடு, மணப்படை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 5 பெண்கள் தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

வங்கதேசத்தில் மத ரீதியிலான ஒடுக்குமுறை - ஜனநாயக நாடுகளின் வழி அல்ல! - இஸ்கான் துறவியின் கைதுக்கு சத்குரு கடும் எதிர்ப்பு!

கரையை கடக்கும் முன்பே ஃபெங்கல் புயல் வலுவிழக்கும்..? - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

மதியம் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments