ரூ.1600 கோடி அன்னிய முதலீடுகளை ஈர்க்க துபாயில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் மார்ச் 26 - 28 வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரூ.1 600 கோடி அன்னிய முதலீடுகளை ஈர்க்க துபாயில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.