போதையில் சாலையில் செல்வோரை அரிவாளால் தாக்கிய ரவுடிகள்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (08:16 IST)
சென்னை செம்மஞ்சேரியில் போதையில் சாலையில் செல்வோரையெல்லாம் ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிலருக்கும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
 
இந்நிலையில் நேற்றிரவு பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் போதையில் சுனாமி நகர் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளனர். மேலும் அவ்வழியே சென்ற 3 பேரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments