Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பல்லோவில் கொண்டு செல்லப்பட்ட ரோபோ: ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?

அப்பல்லோவில் கொண்டு செல்லப்பட்ட ரோபோ: ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (09:44 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பது அப்பல்லோ நிர்வாகத்துக்கே தெரியாத ஒன்று. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு பேட்டியளித்து வருகிறார் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி.


 
 
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார், அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என கூறும் பிரதாப் ரெட்டி, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, முதல்வரின் உடலுறுப்புகள் சீராக ஏழு வாரங்கள் ஆகும் என மாறி மாறி பேசி வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு ரோபோடிக் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்பட்டு அது முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரோபோடிக் தெரபி சிகிச்சை மிகவும் பிரசித்தி பெற்றது.
 
அந்த ரோபோடிக் தெரபி சிகிச்சை மூலம் முதல்வரின் உடல் அசைவை மேற்கொள்ளும் சிகிச்சையை செய்ய அப்பல்லோ திட்டமிட்டிருப்பதாகவும் வழக்கமான பிசியோதெரபியும் தொடரும் எனவும் மருத்துவமனை வட்டார தகவல் கூறுகின்றது.

இந்நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய ஜெயலலிதா அவர் விரும்பும்போது மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்வார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். டிசம்பர் 5லிருந்து 12ம் தேதிக்குள் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments