Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

Mahendran
புதன், 13 நவம்பர் 2024 (18:07 IST)
இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகத்திற்கு நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டியை வடிவமைக்க ஒத்துழைப்பு முயற்சியில் இணையும்
ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் 
 
தொழில்நுட்பத்தை கல்வி மற்றும் கலாச்சாரம் சார்ந்த அனுபவங்களோடு ஒருங்கிணைக்கும் இலக்கை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் மீது விரிவான தகவலையும் மற்றும் வழிகாட்டலுடன் சுட்டிக்காட்டலையும் வழங்க வருகையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு நவீன மொழி மாடல்களை இந்த ரோபோ செயல்திட்டம் பயன்படுத்தும். 
 
சென்னை, 13 நவம்பர் 2024: ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் அமைந்துள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக (JGU) வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகம் மற்றும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான அகாடமிக்காக ஒரு புதுமையான பாதியளவு மனித உருவம் கொண்ட ரோபோ வடிவமைக்கப்பட உள்ளது.  அருங்காட்சியக வருகையாளர்களுக்கான மற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேக்களுக்கான ஸ்மார்ட் அசிஸ்டன்ட் (S.A.M.V.I.D) உருவாக்கத்தின் மீது ஒத்துழைப்பதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் (IITM) மற்றும் ஓபி ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி (JGU), கையெழுத்திட்டிருக்கின்றன.  இந்தியாவில் அரசமைப்பு சட்டம் உருவாக்கி ஏற்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.  மேம்பட்ட தொழில்நுட்பத்தின் வழியாக அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் நபர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக ஒரு தனித்துவமான ரோபோவை உருவாக்குவதற்கான புத்தாக்க முயற்சியாக இது இருக்கும். 
 
அரசமைப்பு அருங்காட்சியகம், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான அகாடமி என்பது, ஒரு நிகரற்ற முன்னெடுப்பாகும்.  இந்திய அரசமைப்பு வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்படுகின்ற ஒரு சிறப்பான அமைவிடமாக இது திகழும். இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில் 2024 நவம்பர் 26-ம் தேதியன்று இந்த அருங்காட்சியகம் தொடங்கி வைக்கப்படும் மற்றும் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படும்.
 
இந்த இலக்கிற்காக நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இன்டராக்டிவ் அனுபவங்கள், 3-D அமைப்புகள் மற்றும் முற்போக்கான டிஸ்பிளேக்கள் ஆகியவை இந்த புதுமையான அருங்காட்சியகத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.  இந்தியாவில் எந்தவொரு கல்வி நிலையத்திலும் முதன் முறையாக நிறுவப்படும் அருங்காட்சியகம் என்ற பெருமையை இது பெறுகிறது.  ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கும் மற்றும் ஐஐடி மெட்ராஸ் – ன் தொழில்நுட்ப  நிபுணத்துவத்திற்கான மையத்திற்குமிடையே மேற்கொள்ளப்படும் இந்த ஒத்துழைப்பு, ஒரு குடியரசாக இந்தியாவை நிலைநாட்டியிருக்கும் மிக முக்கியமான ஆவணமான அரசமைப்பு சட்டத்தை கொண்டாடுகின்ற ஒரு புதிய அனுபவத்தை உயிரோட்டத்துடன் இது வழங்கும். 
 
வருகையாளர்களின் அனுபவங்களை இன்டராக்டிவாக மாற்றுகின்ற மற்றும் காட்சிப்பொருட்கள் மீது விரிவான தகவலையும், வழிகாட்டப்படும் சுட்டிக்காட்டல்களையும் வழங்குகின்ற மேம்பட்ட மொழி மாடல்களை (S.A.M.V.I.D) செயல்திட்டம் பயன்படுத்தும்; அரசமைப்பு சட்டத்திற்கு முக்கியமான பங்களிப்புகளை செய்த ஆளுமைகள் மற்றும் அரசியலமைப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களது விவரக்குறிப்புகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.  தொழில்நுட்பத்தை கல்வி மற்றும் கலாச்சார அனுபவங்களோடு ஒருங்கிணைக்கும் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக இந்த ஒத்துழைப்பு இருக்கும்.   
 
 அரசமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மீதான புரிந்துகொள்ளலை செழுமையாக்கவும், அவைகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் அதன் உருவாக்கத்திற்கு வடிவமைப்பு தந்த வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்கள் பற்றி எடுத்துரைக்கவும் இந்தியாவின் முதல் அரசமைப்பு சட்ட அருங்காட்சியகத்தை ஜிண்டால் குளோபல் பல்கலை நிறுவுகிறது.  கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்ட ஆர்வமூட்டும் சாதனங்கள், காட்சிப்பொருட்கள் மற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேக்களை இந்த அருங்காட்சியகம் கொண்டிருக்கும்.  நமது அரசமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பிரிவு மற்றும் அவைகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள ஒரு சிறந்த அமைவிடமாக இது இருக்கும்.  வாசகம், ஒளி ஒளி காட்சி மற்றும் அனுபவம் என பல வடிவங்களின் வழியாக அரசமைப்பு சட்டம், அதன் உருவாக்கம் மற்றும் அதன் பல்வேறு கூறுகள் மீது வருகையாளர்களின் ஆர்வத்தை  இந்த அருங்காட்சியகம் தூண்டிவிடும். 
 
   
மிகப்பெரிய ஈர்ப்பு அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மியூசியத்தில் இடம்பெற்றுள்ள கலைப்பொருட்களுள், கையால் எழுதப்பட்ட ஆவணங்களையும் மற்றும் அரசமைப்பு சட்டத்தால் உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளையும் உள்ளடக்கும். 
 
ஐஐடி மெட்ராஸ் உடனான JGU – ன் கூட்டாண்மையானது, கடந்தகால வரலாற்றை உயிரோட்டமுள்ளதாக கொண்டு வருகின்ற ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கும் குறிக்கோளோடு சமீபத்திய வடிவமைப்பு, ரோபோக்களின் பயன்பாடு, மிகச்சிறப்பான வன்பொருள் சாதனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை ஐஐடி மெட்ராஸ் வழங்கும். 
 
ஐஐடி மெட்ராஸ் – ன் இயக்குனர், புரொஃபசர் V. காமகோடி இந்நிகழ்ச்சியின் போது உரையாற்றுகையில், “வரலாற்றை உயிரோட்டமானதாக கொண்டு வரும் SAMVID என்ற ஒரு மனித வடிவிலான ரோபோ வழியாக, இந்தியாவில் அரசமைப்பு சட்ட வரலாற்றை ஆர்வமுள்ளதாக வழங்கும் திட்டத்திற்கு பங்களிப்பதில் ஐஐடி மெட்ராஸ் பெருமிதம் கொள்கிறது.  பாரம்பரியத்துடன் தொழில்நுட்பத்தை கலப்பதன் வழியாக, அரசமைப்பு அருங்காட்சியகத்தை ஒரு அற்புதமான அனுபவமாக நாங்கள் மாற்றியமைத்திருக்கிறோம்; நமது தேசம் உருவான வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பார்வையாளர்கள் ஆர்வத்தோடு புரிந்துகொள்ள இது உதவும்.  நவீன இந்தியாவை வடிவமைத்திருக்கின்ற உணர்வையும் மற்றும் விவாதங்களையும் உயிரோட்டம் உள்ளதாக வழங்கும் SAMVID, ஒரு தனித்துவமான இன்டராக்டிவ் பயணத்தை பார்வையாளர்களுக்கு சாத்தியமாக்குகிறது.  ஐஐடி மெட்ராஸ் – ல் எமது தொழில்நுட்ப புத்தாக்கங்கள், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அனுபவங்களை மேலும் செழுமையாக்குவதற்காக வடிவமைக்கப்படுபவை.  எதிர்கால தலைமுறையினருக்கு நமது ஜனநாயக பண்புகளையும், மதிப்பீடுகளையும் கற்றுத்தந்து மனதில் பதிய வைப்பதில் SAMVID ஒரு முக்கியப் பங்காற்றும்.” என்று கூறினார்.
 
JGU-வின் துணை வேந்தர், பேராசிரியர் C ராஜ் குமார், “ஐஐடி மெட்ராஸ் உடனான எமது கூட்டாண்மை, புத்தாக்கம் மற்றும் கல்வி மீதான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. S.A.M.V.I.D. ரோபோ இடம்பெறும் அரசமைப்பு சட்ட அருங்காட்சியகம், இந்நாட்டின் குடிமக்களுக்கு அறிவுக்கான கலங்கரை விளக்கமாக செயலாற்றும்; தகவலையும், உத்வேகத்தையும் சேர்த்து வழங்கும் விதத்தில் அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களையும், குறிக்கோளையும் ஆராய்ந்து தெளிவதற்கு இது உதவும். S.A.M.V.I.D. செயல்திட்டம் செயல்படுத்தப்படும்போது JGU-வில் உள்ள அரசமைப்பு சட்ட அருங்காட்சியகத்தை வருகையாளர்கள் பார்வையிடும் நடைமுறையையே இது மறுநிர்ணயம் செய்யும்; வரலாறும், பாரம்பரியமும், தொழில்நுட்பத்தையும், புத்தாக்கத்தையும் சந்திக்கிறவாறு தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டின் வழியாக இந்தியாவின் அரசமைப்பு சட்டம் உருவான மற்றும் கடந்து வந்த பயணம் குறித்து அறியவும், அதை வியந்து பாராட்டவும் வழிவகுக்கும்,” என்று கூறினார்.
 
புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான அலுவலகத்தின் (OIE) வழியாக, S.A.M.V.I.D. திட்ட செயலாக்கத்தை ஐஐடி மெட்ராஸ் மேற்கொள்கிறது.  தொழில்முனைவு சார்ந்த முன்னெடுப்பு திட்டங்களையும் மற்றும் ஒத்துழைப்பின் வழியாக புத்தாக்கங்களையும் பேணி வளர்ப்பதில் OIE பொறுப்புறுதி கொண்டிருக்கிறது.  ஐஐடி மெட்ராஸ் – ல் அமைந்துள்ள ரோபோட்டிக் சென்டர், ரோபோட்டிக்ஸ் துறையில் புதிய பாதை படைக்கும் நிபுணத்துவ அறிவியலாளர்களை கொண்டிருக்கிறது.  மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் மற்றும் நீருக்கு கீழே இயங்கும் மற்றும் தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு குறித்து மேம்பட்ட நிபுணத்துவம் மிக்கவர்களாக இக்குழு இயங்குகிறது.  JGU – ல் அமைக்கப்பட்டுள்ள அரசமைப்பு அருங்காட்சியகத்திற்காக ஒரு சுற்றுலா வழிகாட்டி ரோபோ வடிவமைக்கப்படும் ஒரு தனிச்சிறப்பான திட்டமாக இது இருக்கும். 
 
இந்த முன்னெடுப்பு திட்டத்தை ஒருங்கிணைக்கும் நபரான ஐஐடி மெட்ராஸ்- ல் பொறியியல் வடிவமைப்பு துறை -  ஆர்பிஜி லேப்ஸ் – ன் தலைவர் புரொஃபசர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், “நமது வளமான வரலாற்றை உயிரோட்டத்துடன் வழங்கும் SAMVID என்ற மனித வடிவிலான ரோபோ வழியாக, இந்தியாவின் அரசமைப்பு சட்டம் சார்ந்த வரலாற்றிற்கு பங்களிப்பை செய்வதில் ஐஐடி மெட்ராஸ் பெருமிதமும், கௌரவமும் அடைகிறது.  தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் கலப்பதன் வழியாக, அரசமைப்பு அருங்காட்சியகத்தின் வருகையாளர்களுக்கு நமது தேசத்தின் அடிப்படை பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள ஒரு அற்புதமான அனுபவத்தை எங்களால் வழங்க முடியும்.  புத்தாக்கத்திற்கான மையத்தின் தொழில்நுட்ப ரீதியில் புதுமையான அணுகுமுறையும் மற்றும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களின் கலவையை பயன்படுத்துகின்ற இரு உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அனுபவங்களை செழுமையாக்குவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.  நமது எதிர்கால தலைமுறையினருக்கு ஜனநாயகம் மற்றும் குடியரசு என்ற கருத்தாக்கங்களின் மதிப்பீடுகளை கற்றுத்தர முக்கியப் பங்கினை இந்த ஒத்துழைப்பு செயல்பாடு வழங்கும்,” என்று கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments