Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ஐந்து இடங்களில் திருட்டு! ராஜபாளையத்தை கலக்கிய திருடன்! – போலீஸ் தேடுதல் வேட்டை!

Advertiesment
Theft
, வியாழன், 19 அக்டோபர் 2023 (08:43 IST)
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம்  உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்து இதில் இரண்டு வீட்டில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.


 
இது தொடர்ந்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி தேடி வருகின்றனர் இந்த நிலையில் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நபர் ஐந்து இடத்திலும் ஒரே நாளில் திருட்டில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி காட்சியில்  தெரிய வந்துள்ளது மேலும் இந்த குற்றவாளி இதற்கு முன்பாக வேறு ஏதும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் கைரேகை வைத்து போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் வசிப்பவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும்: முதல்வர் சித்தராமையா