ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (06:27 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாக்குப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவின் போது தகராறு செய்பவர்கள், வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பும் இன்று வெளியாவதால் தீர்ப்புக்கு பின்னர் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடாமல் இருக்கும் வகையிலும் போலீசார் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!

நிதிஷ்குமார் தான் முதல்வர்.. ஜேடியு-வின் 'X' தள பதிவு திடீரென நீக்கம்.. யார் முதல்வர்?

ராகுல் காந்தி யாத்திரை செய்த 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவு! என்ன காரணம்?

சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பீகார் வேட்பாளர்.. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments