Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (11:42 IST)
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக திமுக குற்றம் சாட்டியிருந்தது. இதனால் இந்த தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் வாக்குப்பதிவை நேரலை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
 
ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரங்கள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். அதே நேரத்தில் அங்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருவதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதில் தேர்தல் ஆணையத்தையும் குறை சொல்லியிருந்தது.
 
15 மகம்பெனி துணை ராணுவப்படை கண்காணிப்பில் உள்ளதாக உயர்நீதிமண்றத்தில் ஆணையம் தகவல். ஆனால் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உறுதிபூண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
 
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நேக்கத்துடனேயே திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஒவ்வொரு வாக்காளர்களும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது என கூறியுள்ளது தேர்தல் ஆணையம். மேலும் தேர்தல் வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 
தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள திமுக, சிறப்பு அதிகாரி பந்த்ரா வந்த நாளன்றே ரூ. 100 கோடி பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் வந்துள்ளதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments