Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலினா ! டி டி வி தினகரனா ! பன்னீரா ?

ஸ்டாலினா ! டி டி வி தினகரனா ! பன்னீரா ?
, திங்கள், 20 மார்ச் 2017 (12:29 IST)
அடுத்தடுத்து தேர்தல்கள், முன்னாள் முதல்வரின் தொகுதி, அ தி மு க விற்கு வாழ்வா ? சாவா ? என்ற  பிரச்சனை, தி மு க விற்கு தன்மானப் பிரச்சனை என பல வகைகளில் கவனம் பெறுகிறது R K Nagar என்னும் Dr. ராதா கிருஷ்ணன் நகர்.



இடைத் தேர்தல் களத்தில் தி மு க சார்பாக சிம்லாவா ? மருது கணேஷா ? கிரி ராஜனா ? சசி அ தி மு க சார்பாக டி டி வி தினகரனா ? முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின்  உறவினரா ? பன்னீர்  அ தி மு க சார்பாக மது சூதனனா ? முன்னாள் IPS அதிகாரி திலகவாதியா ? என்ற விவாதங்கள் நிறைவு பெற்று வேட்பாளர்களாக மருது கணேஷனும் டி டி வி தினகரனும் மது சூதனனும் கட்சிகள் சார்பாக முன் மொழியப்பட்டு களம் தெளிவாக தெரிகிறது.

தே மு தி க, பா ஐ க, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், தீபா பேரவை தீபா போன்றோர் எல்லாம் இளைஞர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெறுவார்கள் என்பதே இன்றைய கள நிலவரம். அதிலும் தீபாவின் கணவர் மாதவன் சமாதி பேட்டி தீபா பேரவையை சமாதி கட்டி இருக்கிறது. தமிழன் எப்போதும் ஜெயிக்கும் குதிரை மேல் மட்டுமே நம்பிக்கை வைப்பவன். அந்த வகையில் களம் முதலில் ஓடும் மூன்று குதிரைகளுக்கு மட்டுமே.

ஜனநாயகத்தில்  வேட்பாளரின் வெற்றி என்பது அவர் சார்ந்த சாதி, பண பலம், தொகுதி மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கை,  நடு நிலை வாக்காளர்களின் மனோநிலை என்பதை எல்லாம் தாண்டி அவர் கட்சி அதன் தலைமை பொறுப்பாளர்கள் சார்ந்தும் அமையும். கடந்த சட்டமன்ற தேர்தலில் இடையே போட்டி கடுமையாக இருந்தது. அது ஒரு Neck to Neck வெற்றி. பெரும்பாலான தொகுதிகளில் மக்கள்  தி மு க வா ? அ தி மு க வா ? என்ற போது தி மு க வை தேர்தெடுத்தார்கள். காங்கிரஸா ? அ தி மு க வா ? என்ற போது அ தி மு க வை தேர்தெடுத்தார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் இது வேட்பாளர்களின் களம் அல்ல. இது கட்சி தலைவர்களின் களம். ஜெயிக்க போவது யாரு ?

ஸ் டா லி னா !

அ தி மு க, பன்னீர்  அ தி மு க,  சசி அ தி மு க, தீபா அ தி மு க, அணி என பிளவுப்பட்ட நிலையிலும் கூட வெல்ல முடிய வில்லை எனில்  எப்போதும் முடியாது ஸ்டாலின் நன்கு அறிவார்.   நாளை நமதே ! நாற்பதும் நமதே ! என்று சொல்லி வென்ற கலைஞரின் மகனால் எதிர்க் கட்சிகளை ஓர் அணியில் கொண்டு வர முடியவில்லை ? இன்னும் சொல்ல போனால் திராவிட சித்தாத்தங்களுடன் ஒன்றி போகும் கம்யூனிஸ்ட்களை கூட தங்கள் அணிக்கு கொண்டு வர முடியவில்லை. நமக்கு நாமே என்று 234 தொகுதிகளில் வலம் வந்த ஸ்டாலினுக்கு R K நகர் ஒரு சுய பரிசோதனை களம் தான். ஆளும் கட்சியின் மிகப்பெரும் பூஜப்பலத்தின் முன்    நெருப்பாற்றில் நீந்த வேட்டிய கட்டாயத்தில் தளபதி இருக்கிறார்.

டி டி வி தினகரனா !

அம்மிக்கு ஒரு பக்கம், உரலுக்கு இரண்டு பக்கம், தினகரனுக்கு பல பக்கம். பிளவுப்பட்ட கட்சி, சசிகலாவின் மீதான மக்கள் பார்வை, குடியுரிமை பிரச்சனை, தேர்தல் கமிஷன் தொடர் குடைச்சல், நீதிமன்ற வழக்குகள், திவாகரன் மோதல், எனப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தினகரனே களம் காண்பது MORE RISK MORE PROFIT  RISK எடு, கொண்டாடு கதை தான். தினகரன் தன் சாதியை மட்டும் நம்பி தென் தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் களம் கண்டு இருக்க முடியும். ஆனால் அவர் வைத்திருக்கும் கணக்குகள் வேறு. இரட்டை இலை சின்னம் நாளையே தினகரனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது தினகரனின் முதல் வெற்றியாய் அமையும்.

பன்னீரா ?

பன்னீர் செல்வம், சசிகலா தரப்பு மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சுவற்றின் மீது எரிந்த பந்து போல அவர் மேல் திருப்ப அரம்பித்து இருக்கிறது என்பது தான் நிசம். குடும்ப அரசியலா  ?    ஊழலா  ?  இவர் தம்பி மேல் உள்ள கொலை வழக்கு ? இவர் மகன்கள் மீது உள்ள சொத்துக்கள் எல்லாம் பேசுகிறார்கள் மக்கள். இவரை அந்த மாதவனோ, மது சூதனனோ தான் காப்பாற்ற முடியும். கடந்த சில நாட்களாக தினகரன், பன்னீர் செல்வம் மீது தொடர்ச்சியாக வைக்கும் குற்றச்சாட்டுகள் பன்னீர் இமேஜ் சரிய ஆரம்பித்து இருக்கிறது.

webdunia


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலியாகும் கூடாரம்: தீபா பேரவையிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓட்டம்?