Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக விழாவில் கடவுள் பூஜையா ? –அதிர்ச்சியில் தொண்டர்கள்

Advertiesment
திமுக விழாவில் கடவுள் பூஜையா ? –அதிர்ச்சியில் தொண்டர்கள்
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:23 IST)
திமுக சார்பில் கரூரில் நடக்கும் மாநாட்டிற்கான தொடக்க நிகழ்ச்சியில் இந்து மத வழிபாடுகள் நடந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வாக்கரசியலில் இறங்கிய பின்னர் அரசியல் கட்சிகள் நீர்த்துப் போவது வாடிக்கைதான். சிலக் கட்சிகள் தங்கள் எதை வைத்து ஆட்சிக்கு வந்தோமோ, அந்தக் கொள்கைகளையே ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. திமுக ஆரம்பித்த புதிதில் கையில் எடுத்த திராவிட நாடுக் கொள்கையை ஆட்சிக்கு வந்ததுமே கைவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு 50 காலமாக கூறப்பட்டு வருகிறது.

அதைப்போல திமுக வின் மற்றொருக் கொளகையான கடவுள் மறுப்புக் கொள்கையையும் சமீபகாலமாக கைவிடப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற்போல திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று ரகசிய வழிபாடு செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

அமமுக வில் இருந்து விலகி திமுக வில் இணைந்த முன்னாள் அமைச்சார் செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்கும் விழா கரூரில் 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைத் தாங்க இருக்கிறார். அதற்கான பந்தல் கால் நடும் நேற்று முன் தினம் நடைபெற்றது. அதில் வழக்கத்திற்கு மாறாக திமுக நிகழ்ச்சிகளில் இல்லாத சிறப்புப்பூஜை நடைபெற்றது. இதனால் கலைஞரின் மறைவிற்குப் பிறகு திமுக தனது கடவுள் மறுப்புக் கொளகையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு வருவதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சடங்குகள் போன்றவை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இறப்பிற்குப் பின்புதான் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஹிமாச்சல் டூரில்’ ராகுல் காந்தி என்ன செய்தார் தெரியுமா...?