உலகில் சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது ஃபேஸ்புக். உலகில் பல நாடுகள் பகுதிகளில் இருந்து மக்கள் நட்பாகிக் கொள்ளும் வசதி இந்த ஃபேஸ்புக்கில் உள்ளது.
இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் தனி நபர் பயன்பாட்டில் ரீல்ஸ்கள் உள்ள நிலையில், ஃபேஸ்புக் நிர்வகித்து வரும் இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ்கள் உள்ள நிலையில், தற்போது, ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக் குரூப்களிலும் ரீல்ஸ்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
மேலும், மெட்டா நிர்வகித்து வரும் ஃபேஸ்புக் நிறுவனம் 6 வது ஃபேஸ்புக் உச்சி மாநாட்டை நடத்தியது. இந்த ஆண்டுக்கூட்டத்தில், ஃபேஸ்புக்கில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.
அதன்படி, ஃபேஸ்குரூப்பில் ரீல்ஸ்களை ஷேர் செய்வதற்கு முன் அதை கஸ்டமைஸ் செய்து குறிப்பிட்ட ரீலை எடிட் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
Edited by Sinoj