Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடக்குமுறைக்கு பணிந்து மேட்ச் பாக்கப்போறியா இல்ல தமிழன்னா யாருன்னு காமிக்கப் போறியா? ஜி.வி பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (07:58 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நடத்த விடமாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.
இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடந்தே தீரும் என்றும் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் உறுதிபட கூறிவிட்டது.
 
மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள், செல்போன்கள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
குடிக்க தண்ணீர் கூட கொண்டு வரக்கூடாது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அவர்களின் அடக்குமுறைக்கு அடிபணிந்து கிரிக்கெட்டை பார்க்கப் போறியா?, இல்ல நீ நினைக்கும் கருத்தை வெளிப்படையாக, சுதந்திரமாக சொல்ல முடியலன்னு இந்த விளையாட்ட தவிர்க்கப் போறியா? இல்ல தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments