Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருத்தி அமைக்கப்பட்ட நேர அட்டவணை - மெட்ரோ ரயில் நிர்வாகம்

Advertiesment
Migjam Storm Chennai Metro Trains Sunday Time Table Metro Rail Administration
, திங்கள், 4 டிசம்பர் 2023 (20:40 IST)
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

''புயல் காரணமாக நாளை 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கம் ​நாளை (05.12.2023) MICHAUNG புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும்.

1.​காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 2.​காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 3.​மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 4.​இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். ​மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ​புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (05.12.2023) தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது'' என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிக்ஜாம் புயல்: 'நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்- கமல்ஹாசன்