தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு வருவாய் துறை 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கனமழையால் ஏற்படும் அவசர தேவைகளை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் துறை அவசர கடிதம் எழுதி உள்ளது.
மாவட்ட நிர்வாகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் பேரிடர்கள் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.