Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலை: சூப்பர் அறிவிப்பு..!

Advertiesment
south railway
, வியாழன், 23 மார்ச் 2023 (13:37 IST)
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தென்னக ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே இது குறித்து வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களின் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அதாவது ஏடிவிஎம் இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வழங்கும் பணிக்காக கீழ்க்கண்ட இடங்களில் வசிக்கக்கூடிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
 
காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: மதுரை 6 பேர், திண்டுக்கல் 5 பேர், மணப்பாறை 2 பேர், மானாமதுரை 2 பேர், பரமக்குடி 1, புனலூர் 1, கொட்டாரக்கரா 1, திருநெல்வேலி 5, நாசரேத் 1, திருச்செந்தூர் 1, விருதுநகர் 2 கோவில்பட்டி 2 சாத்தூர் 2 ,சிவகாசி 2 ,சங்கரன்கோவில் 1, புதுக்கோட்டை 1, உடுமலைப்பேட்டை 1, பழனி 1, கல்லிடைக்குறிச்சி 1, செங்கோட்டை 3, சேரன் மகாதேவி 1, கீழப்புலியூர் 1, அம்பாசமுத்திரம்1, பாவூர்சத்திரம் 1, தூத்துக்குடி 1,வாஞ்சி மணியாச்சி 2 
 
இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் பொதுவான நிபதனைகள் மேற்கண்ட ரயில் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Sr. Divisional commercial manager, south Railway DRM office, Madurai 625016. என்றமுகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!