Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜல்லிக்கட்டை நிறைய மக்கள் விரும்பவில்லை’ : மேனகா காந்தி

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (12:12 IST)
பாஜக மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு தான். அதேநேரம் அபாயகரமான, ஆபத்தான ஒரு விளையாட்டு என்றும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார்.
 

 
மேனகா காந்தியின் கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்..
 
மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “யார் என்ன கூறினாலும், பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு, அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது கண்டிப்பாக நடைபெறும்” என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேனகா காந்தி, ”ஜல்லிக்கட்டை அனைவரும் விரும்பவில்லை. சிலர் மட்டும் தான் விரும்புகின்றனர். ஜல்லிக்கட்டை வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments