Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய குழு ஆய்வு

Advertiesment
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய குழு ஆய்வு
, திங்கள், 10 ஜூன் 2019 (12:19 IST)
தமிழகத்தில் மதுரையில் மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதால் மத்திய ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என அன்றைய தமிழக முதமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு அடுத்துள்ள தோப்பூர் என்ற பகுதியில் அமையவிருப்பதாக மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பில் 200 ஏக்கரில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகின.

இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையையும், 100 எம்.பி.பி.எஸ், 60 செவிலியர்கள் படிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்படப்போவதாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் மதுரைக்கு அருகே உள்ள தோப்பூர் பகுதியில் மத்திய ஆய்வு குழு ஆய்வு மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேயர் பதவி வேணும்: அசராத ராஜன் செல்லப்பா; ஆடிப்போன அதிமுக தலைகள்!