தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் என காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் கேரளா உள்பட ஒரு சில மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதை அடுத்து மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றோம் என்றும் 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 100 பேரை கொண்ட 5 குழுவினர் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர் என்றும் சென்னையில் இரண்டு குழுவும் நீலகிரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கன மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் உடனே மீட்டுபடையினர் களத்தில் இறங்கி பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.