Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

விமான நிலையத்தில் அணுக் கதிர்வீச்சு மற்றும் ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்பது மற்றும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்து-பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை!

Advertiesment
Madurai

J.Durai

மதுரை , வெள்ளி, 15 மார்ச் 2024 (08:55 IST)
தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில், மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில், பேரிடர் காலங்களில் அணுக்கதிர்வீச்சு, ரசாயன நச்சு பொருட்கள் அபாயத்தில் இருந்து பொது மக்களையும் விமான நிலைய பணியாளர்களையும் எவ்வாறு துரிதமாக மீட்பது குறித்தும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சி தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் துணை கமாண்டன்ட் சங்கேத் தலைமையிலும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை ஆணைய ஆலோசகர்கள் ரஜினேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . 
 
தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முதலுதவி மைய வீரர்கள் 45 பேர், விமானநிலைய தொழிற்  பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் அதிகாரி விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய முதுநிலை மேலாளர்  ஹரி சங்கர் மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ துறை  அலுவலர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
அணு கதிர்வீச்சுகள் ஏற்பட்டால், அவற்றிலிருந்து விமான பயணிகள் ஊழியர்களை எவ்வாறு மீட்பது மற்றும் பாதுகாப்பாக முதலுதவி வழங்கி மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது என, ஒத்திகை நடைபெற்றது.
 
பின்னர் விமான நிலைய தீயணைப்பு துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குழு, மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பங்கு பெற்ற மூன்று நாள் பயிற்சி முகாம் தனியார் விடுதியில் 2 நாட்கள் நடைபெற்ற , நிறைவு விழாவும் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மைதானத்தில் நடை பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்